இராணுவப் பயிற்சியின் போது சுமார் 100 லிட்டர் எண்ணெய் ஜூக் ஏரியில் கசிந்து மாசு ஏற்பட்டுள்ளது. திங்கட்கிழமை பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஜுக் மாகாணத்தின் சட்ட அமலாக்க அதிகாரிகள், இந்த எண்ணெய் மக்கும் தன்மை கொண்டது என்று கூறினர். தீயணைப்புப் படை, எண்ணெய் மேலும் பரவாமல் தடுப்பதற்கு, தடையை அமைத்துள்ளது.
இராணுவப் பயிற்சியின் போது இராணுவ உறுப்பினர்கள் ஹைட்ரோலிக் பம்பைப் பயன்படுத்தி ஜூக் ஏரியிலிருந்து தண்ணீரை வெளியேற்றிக் கொண்டிருந்தனர். பம்பில் அழுத்தம் குறைந்து ஏரியில் எண்ணெய் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் பம்ப் நிறுத்தப்பட்டது.
ரிஷ் மற்றும் ஜக் நகராட்சிகளின் தீயணைப்பு சேவைகள் ஒரு தடையைப் பயன்படுத்தி எண்ணெய் பரவுவதைத் தடுத்தன.
எண்ணெய் ஏரிக்குள் ஏன் சென்றது என தெளிவாகத் தெரியவில்லை. இராணுவ பொலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மூலம்- swissinfo

