சுவிட்சர்லாந்தில் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் ஆய்வகத்தில் 459 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டதாக பொது சுகாதார மத்திய அலுவலகம் (FOPH) அறிவித்துள்ளது.
இது முந்தைய வாரத்தை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகும். ஒரு வருடம் முன்னர் இதே நேரத்தில் இருந்ததை விடவும் இது இரண்டு மடங்கு அதிகமாகும்.
புதன்கிழமை வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, FOPH 100,000 மக்களுக்கு 5.05 பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுது. ஒரு வருடம் முன்னர் இதே வாரத்தில் இந்த எண்ணிக்கை 2.05 ஆக இருந்தது.
பிராந்திய மட்டத்தில்,கடந்த வாரம் டிசினோவில் 100,000 பேரில், 20.90 பேருக்கு என மிக அதிகமாகவும், ஜூக்கில் மிகக் குறைவாகவும் (0.75) காய்ச்சல் பதிவாகியுள்ளது.
மூலம்- swissinfo

