ஜெர்மனியில் கிறிஸ்மஸ் சந்தைக்குள் வாகனத்தைச் செலுத்தி மக்களைக் கொல்லத் திட்டமிட்ட சந்தேகத்தில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் எகிப்தியர் என்றும், மூவர் மொரோக்கோவைச் சேர்ந்தவர்கள் என்றும் இன்னொருவர் சிரியாவைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் தெற்கு ஜெர்மனியின் பவேரியா (Bavaria) மாநிலத்தில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகத் தெரிகிறது. எனினும் எந்தக் கிறிஸ்மஸ் சந்தையில் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டனர் என்பதை அதிகாரிகள் வெளியிடவில்லை.
ஜெர்மனியின் கிறிஸ்துமஸ் சந்தைகளில் இதற்குமுன் தாக்குதல்கள் நடந்துள்ளன. 2024 டிசம்பரில் மெக்டபர்க் (Magdeburg) நகரின் சந்தைக்குள் ஒருவர் காரை ஓட்டிச்சென்று 6 பேரைக் கொன்றார்.
2016ஆம் ஆண்டு தலைநகர் பெர்லினில் (Berlin) கிறிஸ்மஸ் சந்தையில் இருந்த கூட்டத்தினர் மீது ஒருவர் கனரக வாகனத்தை மோதினார்.
இதன் காரணமாகக் கிறிஸ்துமஸ் சந்தைகளை நடத்துபவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளனர்.
சில நகரங்களில் அதிகரிக்கும் பாதுகாப்புச் செலவால் கிறிஸ்மஸ் சந்தைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

