வலைஸ் கன்டோனில் Crans-Montana ரிசோட்டில் உள்ள Le Constellation பாரில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் டசின் கணக்கானோர் உயிரிழந்திருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் 100இற்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 1.30 மணியளவில் 100இற்கும் அதிகமானோர் பாரில் இருந்த போது, வெடிப்பு ஒன்று நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், குண்டு வெடிப்பு ஏதும் நிகழவில்லை என்றும் தீவிபத்தே ஏற்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தீவிரவாத செயல் அல்ல என்றும் அவர்கள் நிராகரித்துள்ளனர்.
இந்த தீவிபத்தில் 40 பேருக்கு மேல் உயிரிழந்திருப்பதாகவும், 100 பேர் வரை காயம் அடைந்திருப்பதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்படாத போதும், அவர்களில் வெளிநாட்டவர்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில், 140 மீட்புப் பணியாளர்களுடன், 10 ஹெலிகொப்டர்களும், 40 அம்புலன்ஸ்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவத்தை அடுத்து குறித்த பிரதேசம் தடை செய்யப்பட்டுள்ளது. அந்தப் பகுதிக்கு மேலாக விமானங்கள் பறக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
வலைஸ் கன்டோனில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு தினத்தில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம் சுவிஸ் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

