Lucerne நகரமை் நேற்று திட்டமிடப்பட்டிருந்த புத்தாண்டு வானவேடிக்கை நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளது.
தீவிபத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் முழு பிராந்தியத்துடனான “மரியாதை மற்றும் ஒற்றுமையின் நிமித்தம்” இந்த நிகழ்ச்சி ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
16 ஆண்டுகளாக, புத்தாண்டு மஜிக் வானவேடிக்கைகளை நிகழ்த்தி வந்த போதும், தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஒரு பெரிய பொது வானவேடிக்கை நிகழ்ச்சியை நடத்துவது பொருத்தமற்றது என்று ஏற்பாட்டுக் குழு கருதுவதாக அறிவித்துள்ளது.
மூலம்- 20min

