-5.4 C
New York
Friday, January 2, 2026

கிரான்ஸ்- மொன்டானா தீவிபத்து – பொலிஸ் தளபதி வெளியிட்ட மேலதிக தகவல்கள்.

கிரான்ஸ்- மொன்டானாவில் நேற்று அதிகாலை இடம்பெற்ற தீவிபத்தில்,குறைந்தது 40 பேர் இறந்ததாகவும், 115 பேர் காயமடைந்ததாகவும் வலைஸ் கன்டோனல் பொலிஸ் தளபதி பிரடெரிக் கிஸ்லர் தெரிவித்துள்ளார்.

நேற்றுமாலை நடத்திய கூட்டு செய்தியாளர் சந்திப்பில் சம்பவம் குறித்து அவர் விபரித்துள்ளார்.

நேற்றுஅதிகாலை 1:31 மணிக்கு தீவிபத்து கண்டறியப்பட்டது. அதையடுத்து, பொலிஸ் அதிகாரிகளின் முதல் குழு அதிகாலை 1:32 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்தது.

அவசர சேவைகளுடன் விரைவில் மாகாணம் முழுவதிலுமிருந்து கூடுதல் மீட்புக் குழுக்கள் இணைந்தன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீயணைப்புத் துறையினர் தீயை ஒப்பீட்டளவில் விரைவாகக் கட்டுப்படுத்தினர்.

ஆரம்ப விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதிகாலை 5 மணிக்கு, காயமடைந்த அனைவருக்கும் மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

குறைந்தது 40 பேர் இறந்துள்ளனர் 115 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளனர்.

மீட்பு பணிகளில் 13 ஹெலிகொப்டர்கள், 40 அம்புலன்ஸ்கள், 150 மீட்புப்பணியாளர்கள் ஈடுபட்டனர்.

காயமடைந்த 30 பேர் தாங்களாகவே வெளியேறினார். 80 பேரை மீட்புக் குழுவினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles