13.9 C
New York
Saturday, March 21, 2026

டாவோஸ் நோக்கிப் புறப்பட்டார் ஹரிணி அமரசூரிய.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறவுள்ள 56ஆவது உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, புறப்பட்டுச் சென்றுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இன்று முதல் 23 வரை உலகப் பொருளாதார மன்றத்தின் 56ஆவது வருடாந்த மாநாடு நடைபெறவுள்ளது.

இதில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இன்று திங்கட்கிழமை அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இவ்விஜயத்தின்போது, பிரதமர் சர்வதேச மட்டத்திலான முக்கிய தலைவர்கள், உலகளாவிய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஏனைய முக்கியஸ்தர்களுடன் உயர்மட்ட இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles