7.7 C
New York
Monday, March 30, 2026

அமெரிக்காவைத் தவிர்க்கும் சுவிஸ் சுற்றுலாப் பயணிகள்.

சுவிஸ் சுற்றுலாப் பயணிகள் அமெரிக்காவிற்கு பயணம் செய்வது குறைந்து வருகிறது.

2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிராங்கிற்கு எதிராக டொலர் மிகக் குறைந்த மட்டத்தில் இருந்தாலும், சுவிட்சர்லாந்திலிருந்து அமெரிக்காவிற்காக சுற்றுலாப் பயணிகள் வருகை மீண்டும் குறைய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்திலிருந்து வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 20-25% குறைந்து 300,000 ஐ விடக் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என அமெரிக்காவை சுற்றுலா தலமாக ஊக்குவிக்கும் விசிட் யுஎஸ்ஏ குழுவின் தலைவர் ஹெய்ன்ஸ் ஜிம்மர்மேன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு, பயணிகளின் எண்ணிக்கை 10.6% குறைந்து 361,000 ஆக இருந்தது. தொற்றுநோய்க்கு முன்னர், 2019 இல் 474,550 பேர் அமெரிக்காவிற்கு வருகை தந்திருந்தனர்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles