26.6 C
New York
Friday, September 4, 2026

தெஹ்ரானில் உள்ள தூதரகத்தை மூடியது சுவிஸ்.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக தெஹ்ரானில் உள்ள சுவிஸ் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு நேற்று தெரிவித்துள்ளது. தூதரக ஊழியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

“தூதுவர் மற்றும் ஐந்து சுவிஸ் ஊழியர்கள் நேற்று ஈரானில் இருந்து தரைவழியாக பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர்” என்று வெளியுறவு அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

- Advertisement -

மேலும் நான்கு ஊழியர்கள் கடந்த வாரம் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். நிலைமை அனுமதித்தவுடன் அவர்கள் தெஹ்ரானுக்குத் திரும்புவார்கள்.

ஈரானில் அமெரிக்காவின் சார்பாக செயல்படும் சுவிட்சர்லாந்து, இரு நாடுகளுக்கும் இடையே அதன் தொடர்பு வழியைத் திறந்து வைத்துள்ளது என்றும், அமெரிக்க அதிகாரிகளின் சார்பாக, சுவிஸ் வெளியுறவு அமைச்சு ஈரானில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு ஆபத்துகள் மற்றும் அவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து தெரிவித்து வருவதாகவும், சுவிஸ் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles