35.7 C
New York
Friday, July 3, 2026

தப்பிச் சென்ற பசு சுட்டுக்கொலை.

ஓன்சிங்கன் இல் மாடுகளை ஏற்றிச் செல்லும் வாகனத்தில் இருந்து இறக்கும்போது ஒரு பசு தப்பி ஓடியது. வெள்ளிக்கிழமை காலை, இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

A1 நெடுஞ்சாலையை நோக்கி ஓடிய அந்தப் பசு இறுதியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது.

விலங்குரிமை ஆர்வலர் ஒலிவர் பீலி இந்தக் கொலையை வன்மையாகக் கண்டித்துள்ளார்.

கடந்த வாரம் ஓன்சிங்கனில் உள்ள பெல் தொழிற்சாலையின் இறைச்சிக் கூடத்தில் இருந்து ஒரு கன்றுக்குட்டி தப்பி ஓடி, பின்னர் கொல்லப்பட்டது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles