3.2 C
New York
Sunday, March 29, 2026

2026 சுவிஸ் திரைப்பட விருதுகள் விழாவில் லேட் ஷிஃப்ட் சிறந்த திரைப்படமாக தேர்வு.

சுவிஸ்-இத்தாலிய திரைக்கதை எழுத்தாளரும் இயக்குனருமான பெட்ரா வோல்ப் இயக்கிய ‘ஹெல்டின்’ (லேட் ஷிஃப்ட்) திரைப்படம், வெள்ளிக்கிழமை மாலை சூரிச்சில் நடைபெற்ற 2026 சுவிஸ் திரைப்பட விருதுகள் விழாவில், இந்த ஆண்டின் சிறந்த திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

லியோனி போஷ் நடித்த இத்திரைப்படம், லயோனல் பேயரின் இலக்கியத் தழுவலான ‘லா கேஷ்’, நிக்கோலஸ் ஸ்டெய்னரின் கறுப்பு-வெள்ளை திரைப்படமான ‘ஸீ க்ளாபென் ஆன் ஏஞ்சல், ஹெர் ட்ரோவாக்?’, மேரி-எல்சா ஸ்குவால்டோவின் வரலாற்று நாடகமான ‘ஆ ப்ராஸ்-லெ-கார்ப்ஸ்’ மற்றும் பீட் பாம்கார்ட்னரின் ‘பேக்கர் டிராமா’ ஆகியவற்றைத் தோற்கடித்து விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

கடைசி இரண்டு திரைப்படங்களும் மொத்தம் ஏழு சுவிஸ் திரைப்பட விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டன; இறுதியில், அவை ஒவ்வொன்றும் இரண்டு விருதுகளை வென்றன.

அதிக வேலைப்பளு கொண்ட செவிலியர்களைப் பற்றிய திரைப்படமான ‘லேட் ஷிஃப்ட்’ [ஹெல்டின்], ஓஸ்கார் விருதுகளில் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான சுவிட்சர்லாந்தின் பரிந்துரைப் படமாகும்.

பெட்ரா வோல்பேயின் திரைப்படம், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த ஒலி உட்பட மொத்தம் நான்கு விருதுகளை வென்றது. மேலும், அதிக வசூல் செய்த படத்திற்கான (207,000 திரையரங்கு வருகைகள்) முதல் ” பொக்ஸ் ஆபிஸ் குவார்ட்ஸ்” விருதையும் இது வென்றது.

இந்தத் திரைப்படம் மருத்துவமனை செவிலியர் ஊழியர்களுக்கு மரியாதை செலுத்துவதோடு, ஒரு செவிலியரின் இரவு நேரப் பணியையும் பின்தொடர்கிறது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles