26.3 C
New York
Monday, July 20, 2026

ட்ரம்பின் அறிவிப்பை அடுத்து தங்கத்தின் விலை எகிறியது- மசகு எண்ணெய் விலை சரிந்தது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி சந்தை தரவுகளின்படி, WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 95.47 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது. இது 17.48 டொலர் வீழ்ச்சியாகப் பதிவாகியுள்ளதுடன், சதவீத அடிப்படையில் 15.48 சதவீத சரிவாகும்.

அதேபோல், ப்ரெண்ட் வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 92.84 டொலராகக் குறைந்துள்ளது. இதற்கிடையில், மர்பன் வகை மசகு எண்ணெய் விலையும் 106.51 டொலராகக் குறைந்துள்ளது. இது முந்தைய விலையுடன் ஒப்பிடுகையில் 18.85 சதவீத வீழ்ச்சி என சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

அதேவேளை,உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை அறிவித்ததைத் தொடர்ந்து இந்த நிலைமை பதிவாகியுள்ளது. 

அதன்படி, தங்கத்தின் விலை 2.3% ஆல் அதிகரித்து, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,811.66 அமெரிக்க டொலர்கள் எனும் சாதனை அளவை எட்டியுள்ளதாக சந்தை தரவுகள் காட்டுகின்றன. 

இதேவேளை ஏனைய உலோகங்களுக்கிடையில், வெள்ளியின் விலை 4.3 சதவீதத்தால் அதிகரித்து 76.08 டொலராக உயர்ந்துள்ளதுடன், பிளாட்டினம் மற்றும் பெலேடியம் ஆகியவற்றின் விலைகளும் சிறிதளவு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Latest Articles