15.7 C
New York
Monday, September 28, 2026

சந்திரனுக்கான பயணத்தை முடித்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ் II குழுவினர்.

ஆர்டெமிஸ் II (Artemis II) திட்டத்தின் கீழ் சந்திரனுக்கான பயணத்தை மேற்கொண்ட ஒரியன் (Orion) விண்கலம், தனது ஆய்வுப் பணிகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளது.

ஒரியன் விண்கலம் நேற்றிரவு கலிபோர்னியாவின் சென் டியாகோ கடற்கரைக்கு அப்பால் உள்ள பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.

- Advertisement -

10 நாட்கள் விண்வெளிப் பயணத்தை முன்னெடுத்த, ஒரியன் விண்கலம் கடந்த ஏப்ரல் 6ஆம் திகதி சந்திரனை நோக்கித் தனது பயணத்தை ஆரம்பித்திருந்தது.

இந்தத் திட்டத்தின் கீழ், விண்வெளி வீரர்கள் 406,771 கிலோமீட்டர் (252,756 மைல்கள்) தூரத்தைக் கொண்ட பயணத்தைப் பூர்த்தி செய்துள்ளனர்.

மனிதகுலம் விண்வெளியில் இதுவரை பயணம் செய்த அதிகூடிய தூரம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles