21.6 C
New York
Wednesday, September 10, 2025

க.பொ.த சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பம்

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்று  நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகிறது.

இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த பரீட்சையில் 452,979 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதில் 387,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 3,527 பரீட்சை நிலையங்களில் இந்த பரீட்சை இடம்பெறவுள்ளது.

இன்று ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles