17.5 C
New York
Sunday, September 27, 2026

வெசாக் தானசாலை கூட்டத்தில் புகுந்த கார்- 6 பேர் பலி.

மீகொட சந்திக்கு அருகில் இன்று அதிகாலை வெசாக் தானசாலையொன்றில் மக்கள் கூட்டத்திற்குள் கார் ஒன்று புகுந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் மூன்று ஆண்களும் மூன்று பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வெசாக் தானசாலைக்கு அருகில் கூடியிருந்த மக்கள் மீது மோதியதையடுத்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்களில் ஆறு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவத்துடன் தொடர்புடைய காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விபத்துக்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles