24.9 C
New York
Monday, July 13, 2026

வெடிப்பு நிகழ்ந்த வீட்டில் சிதைந்து போன உடல் மீட்பு.

லியோன்டிகா TI-இல் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் வெள்ளிக்கிழமை மாலை, 7 மணியளவில் வெடிப்பு இடம்பெற்றது.

மூன்று காவல்துறை அதிகாரிகள் சிறியளவில் காயமடைந்தனர், மேலும் அந்தக் கட்டிடம் முழுவதுமாக எரிந்து சாம்பலானது.

​​அவசரகால சேவையினர் இடிபாடுகளுக்குள் தேடுதல் நடத்தியபோது, வெடிபொருட்களையும், 59 வயதான சுவிஸ் நாட்டவர் ஒருவரின் உடற்பாகங்களையும் கண்டெடுத்தனர்.

காவல்துறையின் கூற்றுப்படி, வியாழக்கிழமை ஃபைடோவில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சம்பவம் தொடர்பாக அந்த நபர் தேடப்பட்டு வந்தார்.

அவரைக் கைது செய்யச் சென்ற போதே வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles