21.7 C
New York
Friday, August 28, 2026

நேபாள வெள்ளத்தில் காணாமல் போன சுவிஸ் பெண் உயிருடன் மீட்பு.

நேபாளத்திற்கும் சீனாவிற்கும் இடையே ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, நேபாள சுற்றுலா ஆணையத்தால் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருந்த சுவிஸ் பெண் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

இவருடன் மீட்கப்பட்ட வெளிநாட்டவர்களில், இந்தியா, இத்தாலி, பல்கேரியா, அமெரிக்கா, தென் கொரியா, ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மேலும் 30 பேரும், இதுவரை அடையாளம் காணப்படாத தேசிய நாட்டினரும் அடங்கியுள்ளனர்.

நேபாளத்தின் ரசுவாவில் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து, 644 பேர் காணாமல் போனதாக சுற்றுலா ஆணையம் அறிவித்தது. காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் இந்திய அல்லது நேபாள நாட்டினர் ஆவர்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles