சூரிச்சின் 9-வது மாவட்டத்தில் உள்ள பேடனர்ஸ்ட்ராஸ் சாலையில் நேற்றுக்காலை ஒரு கோர விபத்து ஏற்பட்டது.
காலை 8:45 மணியளவில் பேடனர்ஸ்ட்ராஸ் 424 அருகே, வழித்தடம் 2-ல் இயங்கிய ஒரு கோப்ரா ட்ராம், பாதசாரிக் கடவையில், சாலையைக் கடந்து கொண்டிருந்த 37 வயது பாதசாரி மீது, மோதியது.
அந்த நபர் சாலையிலிருந்து தூக்கி எறியப்பட்டு, நகர மையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு காரில் மோதி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
ட்ராம் ஓட்டுநரும் கார் ஓட்டுநரும் காயமின்றி தப்பினர். அவர்களுக்கும், விபத்தைக் கண்ட பலருக்கும், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் சூரிச்சின் பாதுகாப்பு மற்றும் மீட்பு சேவையின் பராமரிப்புக் குழுவினரால் சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.
விபத்தின் சரியான சூழ்நிலைகளைத் தெளிவுபடுத்துவதற்காக, சூரிச் நகர காவல்துறையின் விபத்து விசாரணைப் பிரிவும், சூரிச் தடயவியல் நிறுவனத்தின் நிபுணர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
விபத்து நடந்த பகுதியில், பேடனர்ஸ்ட்ராஸ் சாலை இரு திசைகளிலும் டிராம் போக்குவரத்திற்காக மூடப்பட்டது. வெளியே செல்லும் போக்குவரத்தும் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது.
மூலம்- bluewin


