19.3 C
New York
Tuesday, September 22, 2026

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் வழக்கு- 15 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு, 9 பேர் விடுதலை.

கொழும்பு மற்றும் பல பகுதிகளில் உள்ள சுற்றுலா விடுதிகள், தேவாலயங்கள் மற்றும் ஏனைய இடங்களை இலக்கு வைத்து 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டுள்ளனர்.

எஞ்சிய 9 பிரதிவாதிகளும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

- Advertisement -

தாக்குதல் நடத்துவதற்குச் சதி செய்தல் மற்றும் தாக்குதல்களுக்கு உதவி, ஒத்துழைப்பு வழங்கியமை உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகளின் பேரில் 24 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்ஸங்க ஆகியோரை உள்ளடக்கிய மூன்று பேர் கொண்ட மேல்நீதிமன்ற சிறப்பு ட்ரயல்-அட்-பார்  அமர்வு இன்று மாலை 5 மணியளவில் தமது தீர்ப்பை வழங்கியது.

சுமார் ஐந்து ஆண்டுகள் நீடித்த நீண்ட விசாரணையை சிறப்பு ட்ரயல்-அட்-பார் அமர்வு கடந்த ஓகஸ்ட் 24 ஆம் திகதி நிறைவு செய்திருந்து தீர்ப்புக்காக இன்றைய தினத்தை அறிவித்திருந்தது.

15 பேரைக் குற்றவாளிகளாகக் கண்டறிந்துள்ள மேல் நீதிமன்றம், தண்டனை விவரங்கள் இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கவுள்ளது.

Related Articles

Latest Articles