அகதி வாழ்க்கை அந்நிய மண்ணில் வேரூன்ற வைத்தது. மொழி, பண்பாடு, பனிக்காலம் எனப் பல சவால்களைக் கடந்த ஈழத் தமிழர்களின் பிள்ளைகள், இன்று சுவிட்சர்லாந்தின் முக்கியத் துறைகளில் சாதனையாளர்களாக உயர்ந்து நிற்கிறார்கள்!
அவர்களில் குறிப்பிடத்தக்க

டாக்டர் றெமோ ரெஜினோல்ட் (Dr. Remo Reginold)
Swiss Institute for Global Affairs (SIGA) எனும் சுயாதீன ஆய்வு நிறுவனத்தின் தலைவர். சுவிஸ் தேசியப் பாதுகாப்பு, சர்வதேச அரசியல், இராணுவ மூலோபாயம் தொடர்பாக அரசாங்கங்களுக்கும் நிறுவனங்களுக்கும் ஆலோசனை வழங்குபவர்.
டாக்டர் அபிராம் சந்திரலேகர் (Dr. Abiram Sandralegar)
சுவிஸ் இராணுவ மருத்துவர்கள் சங்கத்தின் (ASMD) துணைத்தலைவர். ஜெனீவாவில் நரம்பியல் அறுவைச் சிகிச்சைப் பயிற்சி மருத்துவராகவும் முனைவர் பட்ட ஆய்வாளராகவும் பணியாற்றுபவர்.
டாக்டர் ஆதர்சன் கண்ணதாசன் (Dr. Aatharshan Kannathasan)
Basel நகரில் அறுவைச் சிகிச்சைப் பயிற்சி மருத்துவர். 2026 அக்டோபரில் பேர்னில் நடைபெற்ற போர் மற்றும் பேரிடர் மருத்துவ மாநாட்டின் அறிவியல் தலைமைக்குழுவில் இடம்பெற்றவர்


