-0.7 C
New York
Sunday, December 28, 2025

சந்திரிக்காவின் தோட்டத்திற்குள் புகுந்த இளைஞன் மீது துப்பாக்கிசூடு

முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க (chandrika kumaratunga)விற்கு சொந்தமான ஹொரகொல்ல வளவ்வே தோட்டத்தில் தேங்காய் திருட முற்பட்ட இளைஞர் மீது துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட குற்றச்சாட்டில் காணியின் காவலாளிகள் இருவரை துப்பாக்கிகளுடன் நிட்டம்புவ காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நிட்டம்புவ ஹொரகொல்லாகம பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்து வட்டுபிட்டியல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேல் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு
அவரது உடல்நிலை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

உரிமம் பெற்ற 12 போர் துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் போதைப்பொருளுக்கு அதிகளவி் அடிமையானவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இவர் கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து புனர்வாழ்வளிக்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது.

Related Articles

Latest Articles