22.8 C
New York
Tuesday, September 9, 2025

பேர்கன்ஸ்டொக் நகரத்துக்குள் வெளியார் நுழையத் தடை.

உக்ரைன் அமைதி மாநாடு நடைபெறவுள்ள பேர்கன்ஸ்டொக் நகரம் தடை செய்யப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வார இறுதியில் நடக்கவுள்ள உக்ரைன் அமைதி மாநாட்டில் உலகத் தலைவர்கள் பலர் பங்கேற்கவுள்ளனர்.

இதனால், மாநாடு நடைபெறவுள்ள பேர்கன்ஸ்டொக் நகரைச் சுற்றி, நேற்று மதியத்தில் இருந்து கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

இந்தப் பகுதி தடைசெய்யப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உரிய அனுமதி பெற்றவர்கள் மட்டுமே இந்தப் பகுதியில் தங்கவும் நடமாடவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த தடை செய்யப்பட்ட வலயத்தினால் சுமார் 430 குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் பொலிசில் பதிவு செய்து சிறப்பு அடையாள அட்டையைப் பெற வேண்டும், அதை அவர்கள் சோதனைச் சாவடியில் சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து வாகனங்களும் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலம் மூலம்- The swiss times

Related Articles

Latest Articles