0.8 C
New York
Monday, December 29, 2025

நிட்வால்டன் தேவாலயங்களில் ஒரே நேரத்தில் எழுப்பப்பட்ட மணியொலி.

உக்ரைன் அமைதி மாநாடு நடந்த பேர்கன்ஸ்ரொக் நகரம் அமைந்துள்ள,  நிட்வால்டன் கன்டோன் முழுவதும் நேற்று ஒரே நேரத்தில் தேவாலய மணிகள் ஒலித்து, அமைதி முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

உக்ரைன் போரைப் பற்றிய கவலையை வெளிப்படுத்தவும், அமைதியான சகவாழ்வுக்கு அழைப்பு விடுத்தும் பிராந்தியத்தில் உள்ள கத்தோலிக்க மற்றும் சீர்திருத்த தேவாலயங்களில் காலை 11 மணிக்கு தொடங்கி எட்டு நிமிடங்கள் மணி ஒலி எழுப்பப்பட்டது.

பேர்கன்ஸ்ரொக்கில் அந்த நேரத்தில் அமைதி மாநாடு நடந்து கொண்டிருந்ததால் நிட்வால்டன் மாகாணத்தில் இந்த நேரம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

நிட்வால்டன் கன்டோன் அரசாங்கமும் தேவாலயங்களின் இந்த பிரச்சாரத்தை ஆதரித்தது. அமைதி மாநாட்டை நடத்தும் கன்டோன் அதன் சொந்த சமிக்ஞையை அனுப்புவது முக்கியம் என்றும்,  அது தெரிவித்தது.

ஆங்கிலம் மூலம் – The swiss times

Related Articles

Latest Articles