16.6 C
New York
Wednesday, September 10, 2025

பேர்கன்ஸ்ரொக் மாநாட்டில் இருந்து இடைநடுவில் வெளியேறிய உலக தலைவர்கள்.

பேர்கன்ஸ்ரொக்கில் நடந்த உக்ரைன் அமைதி மாநாட்டில் பங்கேற்க வந்த பல நாடுகளின் தலைவர்கள், இறுதி வரை அதில் பங்கேற்காமல் முன்கூட்டியே புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா உள்ளிட்டவர்கள் நேற்றுக்காலை மாநாடு தொடங்கி சில மணி நேரங்களுக்குப் பின்னர் வெளியேறினர்.

ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் நேற்றுக் காலை மீண்டும் பெர்லினுக்கு திரும்பிச் சென்று விட்டார்.

இருப்பினும் அவரது பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

ஆங்கிலம் மூலம் – The swiss times

Related Articles

Latest Articles