21.6 C
New York
Friday, September 12, 2025

நேருக்கு நேர் மோதிக் கொண்ட கார்கள்- சாரதி பலி.

Uznacherstrasse இல் நேற்று அதிகாலை இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 68 வயதான சாரதி ஒருவர் உயிரிழந்தார்.

Gommiswald இல் இருந்து Ricken நோக்கி காரை ஓட்டிச் சென்ற 37 வயதுடைய நபர் ஒரு நீண்ட வளைவில் மற்றொரு கார் மற்றும் டிரக்கை முந்திச் செல்ல முற்பட்டார்.

அதேநேரத்தில், 68 வயதான நபர் தனது காரில் அவரை நோக்கி வந்த போது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் இரண்டு கார்களும் புல்வெளியில் தூக்கி வீசப்பட்டன. விபத்து நடந்த அதே இருந்த ட்ரக்கும், கார்கள் மோதி சேதமடைந்தது.

68 வயதுடைய சுவிஸ் நாட்டு நபர், தனது காருக்குள் சிக்கி, விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

37 வயதான பிரெஞ்சுக்காரர் காரில் இருந்து காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மூலம்- zueritoday

Related Articles

Latest Articles