6.8 C
New York
Monday, December 29, 2025

சூரிச், சக், லுசேர்ன் பகுதிகளுக்கு நள்ளிரவில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை.

சுவிட்சர்லாந்தில் மேற்கில் இருந்து நகர்ந்து வரும் புயலுடன் கூடிய மழையினால், சூரிச், சக், லுசேர்ன் உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் Limmattal, the Wohlen-Albis, Thalwil-Wetzikon, Wädenswil-Rüti and Zug-Knonau பிராந்தியங்களுக்கு அதிகாரிகள் நிலை 3 புயல் எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

குறிப்பிடத்தக்க ஆபத்து இருப்பதை இது குறிக்கிறது.

இரவில், Emmen-Hochdorf பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் கிளைகள் முறிந்து விழும், மின்னல் தாக்குதல்கள் மற்றும் ஆலங்கட்டி மழை சேதம் எதிர்பார்க்கப்படுகிறது,  செங்குத்தான சரிவுகளில் நிலச்சரிவுகள் ஏற்படலாம், நீரோடைகளில் வெள்ள அலைகளும் ஏற்படும் என Meteo Swiss warns முகப்புப் பக்கத்தில், எச்சரிக்கப்பட்டுள்ளது..

நீர்நிலைகள் மற்றும் வெளியான இடங்களைத் தவிர்க்குமாறும், Meteo Swiss அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

மூலம்- zueritoday

Related Articles

Latest Articles