18 C
New York
Friday, September 12, 2025

ரயில் நிலையத் தரிப்பிடத்தில் பற்றியெரிந்த கார்.

சூரிச்சில் Erlenbach ரயில் நிலையத்தின் அருகிலுள்ள வாகனத் தரிப்பிடத்தில் கார் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.

நேற்று பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

திடீரென கார் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதாக தகவல் வழங்கப்பட்டதை அடுத்து தீயணைப்பு பிரிவினர் விரைந்து சென்ற தீயை முற்றாக அணைத்தனர்.

எனினும், அந்த கார் முழுமையாக சேதமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீவிபத்துக்கான காரணம் தெரியவரவில்லை.

வாகனத்தரிப்பிடத்தில் இருந்து ஏனைய கார்கள் சேதமின்றி தப்பியுள்ளன.

மூலம்-  20min

Related Articles

Latest Articles