29.8 C
New York
Thursday, August 13, 2026

சூரிச்சில் கோர விபத்து – மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி.

சூரிச்சின் Hardbrücke பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.

இடதுபுறமாக சென்று கொண்டிருந்த ட்ரக் ஒன்று எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்த கார் மீது மோதி, சில மீற்றர் தூரத்துக்கு இழுத்துச் சென்றது.

அப்போது எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கார் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய 43 வயதான நபர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து வீதி போக்குவரத்துக்கு மூடப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

மூலம் – 20min

Related Articles

Latest Articles