Bussigny VD இல் நேற்றுக்காலை பாதசாரி மீது டிரக் மோதிய விபத்தில், முதியவர் உயிரிழந்துள்ளார்.
49 வயதான போர்த்துகீசிய சாரதி செலுத்திச் சென்ற ட்ரக், அதே திசையில் பயணித்த முதியவர் மீது மோதியுள்ளது.
உயிரிழந்தவர் சுவிஸ் நாட்டவர் என்று தெரியவந்துள்ளதாக Vaud கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
விபத்துக்கான சரியான சூழ்நிலையை தெளிவுபடுத்துவதற்காக சட்டமா அதிபர் அலுவலகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
மூலம் Theswisstimes

