-5.7 C
New York
Sunday, December 28, 2025

4500 மீற்றர் உயரத்தில் இருந்து கீழே விழுந்த மலையேறிகள்.

Zumsteinspitze மலையில் ஏறிக் கொண்டிருந்த இரண்டு மலையேறிகள், கீழே விழுந்துள்ளனர்.

இன்று காலை 8:30 மணியளவில், இவர்கள்  விழுந்ததை அவதானித்த மூன்றாம் தரப்பினர் தகவல் தெரிவித்தனர்.

இருவரும், 4,500 மீட்டர் உயரத்தில்  இருந்து, சுமார் 300 மீட்டர் ஆழத்தில் விழுந்தனர்.

உடனடியாக விரைந்த மீட்புப் படையினர், அவர்களில் ஒருவரை சடலமாக மீட்டனர்.

இரண்டாவது நபர்  பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு வான்வழியாக, பெர்னில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மூலம் -20min

Related Articles

Latest Articles