28.4 C
New York
Thursday, August 13, 2026

ரயில் மோதி பெண் பலி – கணவன் கண் முன்னே சம்பவம்.

Valais  கன்டோனைச் சேர்ந்த 69 வயதுடைய சுவிஸ் பெண்  ஒருவர், ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று  பிற்பகல் 3.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

Villeneuve மற்றும் Roche இடையே இந்த விபத்து இடம்பெற்றதாக Vaud கன்டோனல் பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்த பெண்ணும் அவரது கணவனும், அதிகாரபூர்வ கடவு இல்லாத ரயில்பாதையைக் கடந்து சென்று கொண்டிருந்த போது, Villeneuve திசையில் இருந்து வந்த ரயில் பெண் மீது மோதியது. அவரது கணவன் காயமின்றி தப்பினார்.

அவசரகால பிரேக்கை ஓட்டுநர் பயன்படுத்திய போதிலும் சரியான நேரத்தில் அதனை நிறுத்த முடியாமல் போனது.

விபத்துக்கான காரணத்தை கண்டறியும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இதனால், Lausanne – Valaisஇடையேயான பாதையில் பல மணி நேரம் ரயில் போக்குவரத்து தடைப்பட்டது.

மூலம் -20min

Related Articles

Latest Articles