21.6 C
New York
Wednesday, September 10, 2025

லுசேர்ன் விபத்தில் ஒருவர் பலி- 5 பேர் காயம்.

Eich LU அருகே A2 வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த ஐந்து பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர் படுகாயமடைந்துள்ளதாக Lucerne  பொலிசார், தெரிவித்தனர்.

தெற்கு நோக்கிய திசையில் காலை 7 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது.

ஜெர்மன் உரிமத் தகட்டுடனான ஒரு வாகனம் சாலையை விட்டு விலகி, போக்குவரத்து பிரிப்பான் மீது மோதி, நிறுத்தப்பட்டிருந்த ட்ரக் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தினால் தெற்கு நோக்கிய வீதியின் ஒரு பாதையில் மட்டுமே வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டன.

விபத்தில் உயிரிழந்த, காயமடைந்தவர்கள் தொடர்பான விபரங்களை பொலிசார் வெளியிடவில்லை.

மூலம் – Bluewin

Related Articles

Latest Articles