அடுத்த வாரம், Bucheggplatz இற்கும் Hirschwiesentunnel இடையே உள்ள சுரங்கப் பாதையில் போக்குவரத்துக்கு முற்றாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 5 ஆம் திகதி திங்கட்கிழமை காலை முதல் ஓகஸ்ட் 10 ஆம் திகதி சனிக்கிழமை காலை வரை, இந்த போக்குவரத்து மூடல் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில், வீதிப் போக்குவரத்து முற்றிலும் மாற்றப்படும் என, சூரிச் நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.
Bucheggstrasse இன் வீதி சீரமைப்பு 2022 ஜனவரி முதல் நடந்து வருகிறது.
ஓகஸ்ட் மாதம் மூடப்பட்ட பிறகு, 2025 வசந்த காலத்தில் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூலம்- zueritoday

