சுவிட்சர்லாந்து ஜனாதிபதி வயோலா அம்ஹெர்ட், இந்த ஆண்டு இறுதியில் சமஷ்டி பேரவையின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
சுவிஸ் தொலைக்காட்சியான SRF க்கு அளித்த பேட்டியில் அவர் இதை உறுதி செய்தார்.
அவர் பதவி விலகப் போவதாக வெளியாகும் வதந்திகளை இந்த பேட்டியில் நிராகரித்துள்ளார்.
ஜனாதிபதியாக நியமனங்கள் மற்றும் கடமைகளில், மும்முரமாக இருப்பதால், பதவி விலகுவது பற்றி சிந்திக்க இன்னும் நேரம் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறு சிந்திக்க நேரம் கிடைத்தால், உடனடியாக ஊடகங்களுக்கு அறிவிப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
மூலம்- zueritoday

