சூரிச் கன்டோனில் உள்ள Maur இல், அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
50 வயதான ஒருவரே தனது 46 வயதுடைய சகோதரரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
இதையடுத்து அவர், ஒருவரைக் கொலை செய்து விட்டதாக பொலிசாருக்கு, அறிவித்துள்ளார்.
எனினும் இந்த கொலைக்கான காரணம் தெரியவில்லை.
இவர்கள் இருவருமே குறித்த வீட்டில் ஒன்றாக வசித்தனர் என்றும், சம்பவம் நடப்பதற்கு முன்னர் இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றதாகவும், அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
மூலம்- 20min

