-0.2 C
New York
Tuesday, December 30, 2025

ட்ராம்கள் மோதி விபத்து – சீர்குலைந்த போக்குவரத்து.

Theater Basel அருகே Steinenberg இல் நேற்று பிற்பகல், 3 மணியளவில் இரண்டு டிராம்கள் மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தினால் நகர மையத்தில் அனைத்து டிராம் போக்குவரத்தும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தடைபட்டது.

இந்த விபத்தில், ட்ராம் ஓட்டுநர் ஒருவர் காயமடைந்தார் என Basel-Stadt கன்டோனல் பொலிஸ் அறிவித்துள்ளது.

இரண்டு டிராம் ஓட்டுநர்களுக்கும் சுவாசப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், எதிர்மறையான முடிவு கிடைத்தது.

இரண்டு டிராம்களை மீட்க Basel-Stadt  தீயணைப்பு சேவை அழைக்கப்பட்டது.

மாலை 5 மணியளவில் பாதை மீண்டும் சீராக்கப்பட்ட போதும், சேவைகளில் தாமதங்கள், ரத்துகள், மாற்றுப்பாதைகளுக்கு திருப்பி விடல் போன்ற குழப்பங்கள் காணப்பட்டன.

மூலம்- 20min

Related Articles

Latest Articles