Arlesheim BL இல் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் காயமடைந்தார்.
இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டது.
இந்த தீவிபத்தில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏனையவர்கள் விரைவாக உரிய நேரத்தில் வெளியேற்றப்பட்டதால், அதிகளவு இழப்புகள் தவிர்க்கப்பட்டன.
இந்த தீவிபத்தை அடுத்து, கடும் புகையால் மூன்று குடியிருப்புகள் சேதமடைந்தன.
இவை தற்போது வாழத் தகுதியற்றவை என Basel பொலிசார் தெரிவித்தனர்.

