உலகின் மிகப் பெரிய தெரு அணிவகுப்பு நேற்று சூரிச்சில் இடம்பெற்றது. கோலாகலமான நிகழ்வுகளுடன் நடந்த இந்த நிகழ்ச்சியில் 10 இலட்சம் பேர் வரை பங்கேற்றிருப்பார்கள் என்று மதிப்பிடப்படுகிறது.
31 ஆவது ஆண்டாக இந்த தெரு அணிவகுப்பு இடம்பெற்றிருக்கிறது.
நேற்று பிற்பகல் 1 மணியளவில் 8 அரங்குகளில் 200இற்கும் அதிகமாக இசைக்குழுக்களின் இசை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
பல்வேறு நிகழ்வுகளுடன் கூடிய இந்த கோடை விழாவில் பங்கேற்பதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர்.
மூலம் -20min.