உலக சுகாதார அமைப்பு mpox வைரஸ் தொற்று தொடர்பான உலகளாவிய அவசர நிலையை அறிவித்துள்ள போதும், சுவிட்சர்லாந்தில் இதன் ஆபத்து நிலை குறைவாகவே இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
சுவிசில் இதன் ஆபத்து மிகக் குறைவாக இருப்பதாகவும், அதிக ஆபத்துள்ள குழுக்களில் உள்ள பெரும்பாலானவர்கள் ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளனர் என்றும், சமஷ்டி பொது சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அதிக ஆபத்துள்ள குழுக்களில், முக்கியமாக ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள், பாலியல் பங்காளிகளை தொடர்ந்து மாற்றும் மாற்றுப் பாலினத்தவர்கள் முக்கியமானவர்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் போதுமான தடுப்பூசிகள் உள்ளன.2022 கோடையில் முதல் முறையாக அதிக எண்ணிக்கையிலான நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.
ஆனால் அந்த ஆண்டின் இலையுதிர்காலத்தில் இருந்து, தொற்று ஆங்காங்கே மட்டுமே பதிவாகியுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, 2024 ஜூன் இறுதி வரை, சுவிட்சர்லாந்தில் மொத்தம் 579 mpox தொற்றுகள் பதிவாகியுள்ளன.
சுவிஸ் மண்ணில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
மூலம்- Swissinfo