ஜெனீவா நோக்கிப் புறப்பட்ட ஈஸிஜெட் விமானம், கொசோவோவின் தலைநகர் பிரிஷ்டினா விமான நிலையத்தில், ஓடுபாதையில் இருந்த கார் மீது மோதுவதில் இருந்து தப்பியுள்ளது.
ஈஸிஜெட் ஏர்பஸ் ஏ320 விமானம் பிரிஸ்டினா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மேற்கிளம்பும் போதே, ஓடுபாதையின் மறு முனையில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மோதுகின்ற நிலை ஏற்பட்டது.
இந்த சம்பவம் ஜூன் 20 ஆம் திகதி இடம்பெற்ற போதும், நேற்றைய தினமே, சுவிஸ் போக்குவரத்து பாதுகாப்பு விசாரணை அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
விமானம் காரின் மீது உரசியபடி சென்றதாகவும், மிகக் குறைந்த இடைவெளியில் விபத்து தவிர்க்கப்பட்டது என்றும் விமானிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்று தகவல் வெளியிடப்படவில்லை.
எனினும் அந்த ஏர்பஸ் 186 பயணிகளுக்கான இடவசதியைக் கொண்டுள்ளது.
மூலம்- Bluewin