Lucerne இல் உள்ள Kellerstrasse இல் ஒரு வீட்டின் பல்கனி இடிந்து விழுந்தது.
வியாழக்கிழமை இரவு 10:30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.இதில், இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
56 வயதுடைய பெண் ஒருவரும் 62 வயதுடைய ஆண் ஒருவருமே, பல்கனியை இடிந்ததில் காயமடைந்துள்ளனர்.
அவசர சேவை மூலம் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மூலம் – 20min