விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தானே முதன்முதலில் படம்பிடித்ததாக, இந்தியா டுடே குழுமத்தின் ஆசிரியபீட இயக்குநர் ராஜ் செங்கப்பா தெரிவித்துள்ளார்.
கொழும்பில்இலங்கை- இந்திய ஊடக நட்புறவு சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“ வேலுப்பிள்ளை பிரபாகரனை முதலில் படம்பிடித்தவன் நான். அவரது முகத்தை நானே உலகிற்கு முதலில் தெரியப்படுத்தினேன்
1982ம் ஆண்டு சென்னையில் ஒரு துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றதாகவும் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தகவல் வந்தது.
அவர்கள் யார் என்பது அவ்வேளை எனக்கு தெரியாது. அந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்தார்.
அவரை அதுவரை எவரும் பார்த்ததில்லை. அவரது புகைப்படங்கள் எதுவும் அதுவரை இருக்கவில்லை.
இலங்கை புலனாய்வாளர்களிடம் கூட அவரது புகைப்படம் இருக்கவில்லை. அவரை கைவிலங்குடன் நான் படமெடுத்தேன்.
நான் அவரை படமெடுத்த வேளை அவரின் முகத்தில் தெரிந்த சீற்றத்தை போல சீற்றத்தை வேறு எவரின் முகத்திலும் நான் பார்க்கவில்லை.
கடும் சீற்றம், கோபம் அவரது முகத்தில் தென்பட்டது. நான் அச்சத்தில் கமராவை கீழே போட்டேன்.
இலங்கை புலனாய்வு பிரிவினர் அந்த படத்தை பெறுவதற்காக கடும் முயற்சிகளை மேற்கொண்டார்கள்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.