கடந்த திங்கட்கிழமை மாலை வீசிய கடுமையான புயலின் போது மின்னல் தாக்கி, 21 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.
கிஸ்வில் நகராட்சியில் அல்ப் ஆர்னியைச் சுற்றியுள்ள பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த புயலினால் விவசாய உள்கட்டமைப்பு மற்றும் விளை நிலங்களுக்கும் சேதம் ஏற்பட்டது.
கடல் மட்டத்தில் இருந்து 2217 மீற்றர் உயரத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
மின்னல் தாக்கியதில் காயமடைந்த செம்மறி ஆடுகள் ஹெலிகொப்டர் மூலம் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டன.
மூலம் – Zueritoday