தற்போது Mpox தொற்று நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆபிரிக்க நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கு சுவிட்சர்லாந்து திட்டமிடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், நிலைமைகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக பொது சுகாதார மத்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்து 40,000 தடுப்பூசி மருந்துகளை வாங்கியுள்ளது. அவை கன்டோன்களுக்கு விநியோகிக்கப்பட்டு, இதுவரை சுமார் 13,000 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
அதேவேளை, Mpox தடுப்பூசியை கையிருப்பு வைத்திருக்கும் நாடுகள், தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு அவற்றை கொடையாக வழங்குமாறு உலக சுகாதார நிறுவனம் நேற்று அழைப்பு விடுத்துள்ளது.
தடுப்பூசி உற்பத்தியாளர்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.
மூலம் – zueritoday