5.3 C
New York
Tuesday, December 30, 2025

ட்ராம்கள் மோதி விபத்து – போக்குவரத்து பாதிப்பு.

சூரிச் நகர மையத்தில்  இரண்டு ட்ராம்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகின.

இந்த விபத்தினால், ரயில் நிலையத்துக்கும் Paradeplatz க்கும் இடையிலான போக்குவரத்துப் பாதை பல மணி நேரம் மூடப்பட்டது.

நேற்று இரவு  7 மணியளவில்,  Bahnhofstrasse இல் 11 மற்றும் 13 ஆம் இலக்க ட்ராம் லைன்களுக்கு இடையே இந்த விபத்து  ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஒருவர்  சிறிய காயமடைந்தார்.

விபத்து எப்படி ஏற்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தற்போது விசாரணை நடந்து வருகிறது.

விபத்துக் காரணமாக Bahnhostrasse மற்றும் Paradeplatz இடையேயான ட்ராம் பாதை மூடப்பட்டுள்ளது.

மூலம் –zueritoday

Related Articles

Latest Articles