Schönenwerd இல் ஒரு பேருந்தும் ஒரு காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், கார் சாரதி பலத்த காயம் அடைந்தார்.
இன்று காலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தை அடுத்து, காயமடைந்த சாரதியை தீயணைப்பு படையினரே, வாகனத்தில் இருந்து மீட்டெடுத்தனர்.
பேருந்தில் இருந்த நான்கு பேரில் மூன்று பேர் சிறிய காயங்களுக்கு உள்ளாகினர்.
அவர்கள், மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.