தடையை மீறி மாணவியை தனிப்பட்ட முறையில் சந்தித்த ஆசிரியருக்கு எதிராக குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
St. Gallen உயர்நிலைப்பாடசாலை ஒன்றில், 27 வயதான ஆசிரியருக்கும், 15 வயது மாணவிக்கும் இடையில் முறையற்ற தொடர்பு இருந்த குற்றச்சாட்டுகள் சுடத்தப்பட்ட நிலையில், கடந்தமே மாதம் குறித்த மாணவியை தனிப்பட்ட முறையில் சந்திக்க பாடசாலை நிர்வாகம் தடைவிதித்தது.
இந்த தடையை மீறி குறித்த ஆசிரியர், மாணவியை தனிப்பட்ட முறையில் சந்தித்துள்ளார்.
அவர் 15 வயது மாணவியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டாரா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இதையடுத்து அவர் பாடசாலையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
அத்துடன் அவர் மீது குற்றவியல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மூலம்- 20min