சூரிச் Triemli City மருத்துவமனையில் பொது மருந்தகம் நேற்று திறக்கப்பட்டுள்ளது.
இது பிரதானமாக வெளிச்செல்லும் மற்றும் வெளிநோயாளிகளின் நலன் கருதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
டிஸ்சார்ஜ் மருந்துச் சீட்டைப் பயன்படுத்தி இங்கு நோயாளர்கள் தங்கள் மருந்தைப் பெற முடியும்.
இது நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் வாரத்தில் ஏழு நாட்களும் திறந்திருக்கும்.
சூரிச் Triemli City மருத்துவமனையின் நுழைவு மண்டபத்தின் மையத்தில் இந்த மருந்தகம் அமைந்துள்ளது.
திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8:30 மணி முதல் மாலை 6:30 மணி வரையிலும், சனிக்கிழமை காலை 8:30 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் இந்த மருந்தகம் திறந்திருக்கும்.
மூலம்- 20min

