ரஷ்ய உளவாளி ஒருவர், சுவிட்சர்லாந்தில், அதிநவீன, துல்லியமாக குறிபார்த்துச் சுடக் கூடிய 1,000 க்கும் மேற்பட்ட ரவைகளை வாங்கியுள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ரவைகள் உள்ளூர் ஆயுத வியாபாரி ஒருவரால் பேர்னில் உள்ள பார்க்கிங் கராஜில் நடந்த சந்திப்புகளின் போது அந்த உளவாளியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
வாங்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் தொலைவில் இருந்து குறிபார்த்துச் சுடக் கூடிய சினப்பர் துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றவையாகும்.
எனினும். சுவிட்சர்லாந்தில் திட்டமிடப்பட்ட தாக்குதல்களுக்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேர்கன்ஸ்டொக் மாநாட்டுக்கு முன்னர் பேர்னில் பணியாற்றிய ரஷ்ய இராஜதந்திரி ஒருவர் உளவாளியாக இனங்காணப்பட்டதை அடுத்து, போர் பொருட்கள் மற்றும் தடைச் சட்ட மீறல்கள் குறித்து சமஷ்டி சட்டமா அதிபர் அலுவலகம் விசாரணைகளை நடத்தி வருகிறது.
எனினும் குறித்த ரஷ்ய உளவாளி சுவிற்சர்லாந்தை விட்டு வெளியேறியுள்ளார்.
மூலம் – 20min.

