Unterseen இல் நேற்று மாலை பாரிய பொலிஸ் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உணவகம் ஒன்றில், பலருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியதை அடுத்தே, பொலிசார் இந்த நடவடிக்கையில் இறங்கினர்.
பல பொலிஸ் வாகனங்கள், அம்புலன்ஸ்கள் அந்த இடத்தில் காணப்பட்டன.
இந்தச் சம்பவத்தில் இரண்டு பேர் சிறியளவில் காயம் அடைந்தனர் என்றும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பேர்ன் கன்டோனல் பொலிஸ் தெரிவித்துள்ளது.
மூலம் – zueritoday

